குஷ்பூ, நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவுக்கு கோயில் கட்டிய தீவிர ரசிகர்!

1 Min Read
நடிகை சமந்தாவுக்கு கோவில்

ஆந்திர மாநிலத்தில் நடிகை சமந்தாவிற்கு அவரது தீவிர ரசிகர் கோயில் கட்டியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் திறப்பு விழா நாளை நடைபெற இருக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

சமந்தா தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் பலரது வரவேற்பை பெற்றுள்ளார். தெலுங்கிலும் சமந்தாவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழில் பானா காத்தாடி மூலம் அறிமுகமான சமந்தா தனது நாட்டின் மூலம் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் குண்டூர் அடுத்து பாபட்லா மாவட்டம் அலபாடு கிராமத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவர் சமந்தாவிற்கு கோயில் கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா நாளை (ஏப் 28) நடைபெற இருக்கிறது.

சமந்தாவிற்கு கோயில் கட்டியது குறித்து சந்தீப் கூறும்போது ,”சமந்தாவின் படங்களை பார்த்து அவரது தீவிர ரசிகராக மாறவில்லை.  பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் சமந்தா பல சேவைகளை செய்து வருவதால் அவர் மீது எனக்கு நன்மதிப்பு வந்தது.

அதனால் தான், அவருக்கு கோயில் கட்டினேன் என்று கூறியுள்ளார். இதனால் எனது வீட்டிமன் ஒரு பகுதியில் கோயில் கட்டியுள்ளதாகவும் சந்தீப் கூறியுள்ளார். இக்கோயிலின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

நடிகை குஷ்பூ, நயன்தாரா, நமீதா, நிதி அகர்வாலைத் தொடர்ந்து சமந்தாவிற்கும் கோயில் கட்டப்பட்டுள்ளது. நடிகை சமந்தா பிரத்யூஸா அறக்கட்டளை மூலம் ஏழ்மையில் உள்ள குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்காக பல உதவிகள் செய்து வருகிறார்.

சமந்தாவிற்கு நடிகர் நாக சைதன்யா உடன் விவாகரத்து பெற்றதையடுத்து அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். அதிலிருந்து அவர் மீண்டு வந்து கொண்டிருந்தார். அவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் அண்மையில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது .

Share This Article

Leave a Reply