விழுப்புரம் மேல்பாதி கோவில் வழிபாடு பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினரிடையே சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது

1 Min Read
பேச்சுவார்த்தையில்

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அடுத்த மேல்பாதி கிராமத்தில் தர்மராஜா உடனுறை திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு ரத உற்சவ தீமிதி விழா நடைபெற்றது. அப்போது இரவு 9 மணியளவில் பக்கத்து கிராமமான பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதனைக் கண்ட விழாக் குழுவினர், பிள்ளையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரை கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து பலகட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது.

- Advertisement -
Ad imageAd image

இதற்கிடையில் அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆய்வு கூட்டத்திற்கு வந்த போது பட்டியலின மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியை  பட்டியலின் மக்கள் முற்றுகையிட்டனர்.அப்போது அவர்களிடம் பேசிய பொன்முடி கோயிலுக்கு செல்ல யார் தடுத்த்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

மீண்டும் பட்டியலின மக்கள் அந்த கோயிலில் அனுமதிக்கப்படவில்லை.அதனை தொடர்ந்த நேற்று மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.பேச்சுவார்த்தையில் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு மக்களும் பங்கேற்றனர்.

அப்போது இருதரப்பு மக்கள் பிரதிநிதிகளிடமும் கருத்து கேட்க்கப்பட்டது.அரசு தரப்பில் சில ஆலோசனைகளும்,அறிவுறைகளும் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் இரு தரப்பினரிடையே சமரச தீர்வு காணப்பட்டது.

மேலும் கோயிலுக்குள் வழிபாடு செய்வதற்கான நாள் குறித்து இருதரப்பினரும் தீர்மானித்து  தெரிவித்தவுடன் இருதரப்பினருமஅமைதியான முறையில் வழிபாடு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டாதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.இந்த பேச்சுவார்த்தையின் போது மாவட்ட எஸ்பி(பொறுப்பு)மோகன்ராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Share This Article

Leave a Reply