கும்மிடிப்பூண்டியில் 11 வயது மாணவன் காலை 6.55 முதல் மாலை 6.10 வரை 11.15 மணி நேரம் தண்ணீரில் மிதந்து மச்சாசனத்தில் தண்ணீர் கூட குடிக்காமல் உலக சாதனை படைத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே சின்ன ஒபலாபுரம் பகுதியில் உள்ள 22 அடி அகலம், 35 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 30 அடி தண்ணீரில் 11 வயது மாணவன் உலக சாதனை நிகழ்த்தி காட்டப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே சின்ன சோழியம்பாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில் குமார், செல்வி தம்பதியரின் மகன் சிவமணி 11 வயதான இவர் பொன்னேரி வேலம்மாள் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள கைரலி யோக வித்யா பீடத்தில் யோகா ஆசிரியர் ராதாகிருஷ்ணனிடம் கடந்த 2 ஆண்டுகளாக யோகா பயின்று வருகிறார். இந்த நிலையில், கிணற்றில் 11 மணி நேரம் மிதந்து உலக சாதனை படைத்துள்ளார்.

அப்போது காலை 6.55 மணிக்கு கிணற்றில் இறங்கி ஜல கிரீடாவில் மச்சாசனத்தில் மிதந்தபடி மாலை 6.10 மணி வரை, அதாவது 11 மணி 15 நிமிடங்கள் சாதனை படைத்துள்ளார். அப்போது தண்ணீரில் மிதந்தபடி பத்மாசனம், விருக்ஷாசனம், கோமுகாசம், மச்சாசனம் உள்ளிட்ட ஆசனங்களையும் செய்து அசத்தினார்.

குறிப்பாக அசிஸ்ட் வேர்ல்ட், வேல்ட் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெகார்ட், இந்தியன் அச்சுவர்ஸ், தமிழன் அச்சுவர்ஸ் புக் ஆப் ரெகார்ட்ஸ் ஆகிய 4 உலக சாதனை புத்தகங்களில் அவரது சாதனை பதிவு செய்யப்பட்டது.

அப்போது 11 மணி நேரம் தண்ணீரில் மிதந்தும், துளி தண்ணீர் கூட அருந்தாமல் சிவமணி இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
இதனை பலர் தண்ணீரில் மிதந்து சாதனை செய்திருந்தாலும், கிணற்றில் மிதந்து சாதனை படைத்திருப்பது இதுவே முதல் முறை. இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.