பஞ்சாபில் ”காலிஸ்தான்” பிரிவினைவாத தலைவரும் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவருமான அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.ஒருமாத காலமாக தேடி வந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது.
பஞ்சாபை பிரித்து ‘காலிஸ்தான்’ என்ற தனி நாடு உருவாக்கும் நோக்குடன் இன்றும் ஏராளமானோர் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இன்றும் சீக்கியர்கள் உதவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பின் தலைவரான அம்ரித் பால் சிங், தன்னைத் தானோ சீக்கிய மதகுரு என்று அறிவித்து கொண்டார்.
அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் கடந்த மாதம் லவ்பிரீத் என்பவரை ஒரு கடத்தல் வழக்கில் போலீஸார் கைது செய்திருந்தனர்.அவரை விடுதலை செய்யக்கோரி அம்ரித்பால் சிங் பயங்கர ஆயுதங்களுடன் காவல் நிலையம் செற்று அவரை மீட்டு வந்தார்.அப்போதே அவரை போலீசார் கது செய்ய திட்டமிட்டுவிட்டனர்.

இந்நிலையில் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை விவகாரத்தில் நிலைமை கை மீறி போவதை உணர்ந்த பஞ்சாப் காவல்துறையினர் அம்ரித் பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை கைது செய்ய திட்டமிட்டனர். ஜலந்தர் மாவட்டம் மெகத்பூர் பகுதியில் பஞ்சாப் போலீஸார் நேற்று அம்ரித்பால் சிங்கை கைது செய்தனர்.
முன்னதாக, ஜலந்தரில் அவரை போலீஸார் கைது செய்ய முயன்றனர். ஆனால் இத்தகவலை முன்கூட்டியே அறிந்த அம்ரித்பால் சிங் ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றார். இதையடுத்து தப்பி ஓடிய அமரித் பால் சிங்கை காவல்துறையினர் துரத்தி சென்று மெகத்பூர் பகுதியில் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் 78 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் சுமார் 500 பேரை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

எந்த வழக்கில் கீழ் அம்ரித்பால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரத்தை போலீஸ் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை. எனினும் முகத்சர் நகரில் இருந்து இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத ஊர்வலத்தை தொடங்க இருப்பதாக அம்ரித் பால் சிங் அறிவித்திருந்த நிலையில், போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
பஞ்சாபில் கலவரம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நண்பகல் 12 மணி வரை இணையதள சேவையை போலீஸார் முடக்கியுள்ளனர்.
அதே சமயம் மக்கள் அமைதி காக்க வேண்டும், புரளிகளை நம்ப வேண்டாம் எனவும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.