பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் இந்தியாவின் எழுச்சி “உலக அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய நிலைக்கு மிகப்பெரிய உத்தரவாதம்” என்று குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் இன்று கூறியுள்ளார். உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளை ஈடுபடுத்துவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
குடியரசுத் துணைத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற சர்வதேச உத்திசார் ஈடுபாட்டுத் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடியபோது குடியரசு துணைத்தலைவர் இதனைத் தெரிவித்தார். 21 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் 8 இந்திய அதிகாரிகள் இடம் பெற்றுள்ள இந்த இரண்டு வார நிகழ்ச்சிக்கு தேசிய பாதுகாப்புக் கல்லூரி ஏற்பாடு செய்துள்ளது.

அப்போது பேசிய திரு தன்கர், “இந்தியாவின் அசாதாரண வளர்ச்சி முறை சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு, தொலைநோக்குத் தலைமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அசைக்க முடியாத விடாமுயற்சி ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது” என்று அவர் மேலும் கூறினார்.
இன்றைய ஆற்றல் மிக்க புவிசார் அரசியலுக்கு மத்தியில் இந்தியாவின் முன்னெப்போதும் இல்லாத எழுச்சி தனித்து நிற்கிறது என்பதை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர், விரிவடைந்து வரும் பொருளாதாரம், பயனுள்ள ராஜதந்திரம் மற்றும் வளர்ந்து வரும் மென்மையான சக்தி ஆகியவற்றுடன், அமைதிக்கான உறுதியான சூழல் அமைப்பை ஊக்குவிப்பதற்காக உலகம் இந்தியாவை எதிர்பார்க்கிறது என்று கூறினார்.
உலக அமைதி, பாதுகாப்பு ஆகியவை வளர்ச்சிக்கு அடிப்படையானது என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், வலிமையான நிலையிலிருந்தே அமைதி பாதுகாக்கப்படுவது சிறந்தது என்று உறுதிபடக் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.