மீண்டும் அமீர் யுவன் கூட்டணி

2 Min Read
இயக்குநர் அமீர்

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், இயக்குநர் அமீரும் புதிய படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அமீர். சில படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் என்ற பெயரையும் அமீர் எடுத்திருக்கிறார். அவரது இயக்கத்துக்கென்று சில எதிர்பார்ப்புகளும் உண்டு.

சூர்யாவை வைத்து மௌனம் பேசியதே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் அமீர். கடந்த 2001ஆம் ஆண்டு இயக்கிய அப்படத்தில் த்ரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். காதல் படமாக உருவாகியிருந்தாலும் திரைக்கதையில் அமீர் தனது வித்தியாசத்தை காண்பித்திருப்பார். இதனால் அப்படம் வசூல் ரீதியாக ஹிட்டாகவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

தயாரிப்பாளரான அமீர் இதனையடுத்து ஜீவா நடித்த ராம் படத்தை இயக்கினார் .அந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். தாய் மீது அபரிமிதமான பாசம் வைத்திருக்கும் ஒரு மகன் என்ற ஒன்லைனை வைத்து மாயாஜாலம் செய்திருப்பார் அமீர். அப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், ஜீவாவுக்கு அவரது கேரியரில் முக்கியமான படமாக ராம் கருதப்படுகிறது. அவ்வளவு சிறிய வயதில் இதுபோன்ற கதைகளில் நடிப்பது மிகப்பெரிய சவால் என பலரும் பாராட்டுவது உண்டு.

அமீரின் பருத்திவீரன் அமீருக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவுக்கே முக்கியமான படம் பருத்திவீரன். சூர்யாவின் தம்பி கார்த்தி அறிமுகமான அந்தப் படம் இன்றுவரை பலரது ஃபேவரைட். அந்தப் படம் வந்த பிறகுதான் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை மையமாக வைத்து படங்கள் வருவது அதிகமாகின. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் பலரையும் பதற செய்து ரிலீஸ் ஆன சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

நடிப்பில் கவனம் செலுத்தும் அமீர் இப்படி முக்கியமான படங்களை இயக்கிய அமீர் சமீபத்தில் இயக்கத்தை விட்டு நடிப்பில் கவனம் செலுத்தினார். அப்படி அவர் நடித்த வடசென்னை படம் மெகா ஹிட்டானது. அதில் ராஜன் கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டியிருப்பார். அமீர். இருந்தாலும் அமீர் மீண்டும் இயக்கத்திற்கு வர வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர்.

மீண்டும் இயக்கத்தில் அமீர் தற்போது ‘உயிர் தமிழுக்கு’ என்ற அரசியல் கதையை மையமாகக் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். இதையடுத்து ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக கடந்த வருடம் அறிவித்திருந்தார்.

எவர்க்ரீன் கூட்டணி இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அமீரும் இணைந்து புதிய படத்தை வெளியிட உள்ளனதாக அமீர் தெரிவித்துள்ளார். இதில் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத் தலைப்பு மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காத்திருப்போம்.

Share This Article

Leave a Reply