ஆம்பூரில் விசாரணை கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த காவல்துறை வாகனம் திடீரென பழுதாகி நின்றதால், வாகனத்தை தள்ளிச்சென்று ஸ்டார்ட் செய்த காவலர்கள், வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பு.

வேலூர் மத்திய சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளை திருப்பத்தூர் மாவட்டம், அடுத்த ஆம்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு காவலர்கள் அழைத்து வந்து, மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு சென்ற போது, காவல்துறை வாகனம் திடீரென ஆம்பூர் நகர காவல்நிலையம் அருகே திடீரென பழுதாகி நின்றது.

இதனால் வெகுநேரம் ஆகியும், விசாரணை கைதிகளை ஏற்றி வந்த வாகனம் ஸ்டார்ட் ஆகாததால், விசாரணை கைதிகளை அழைத்து வந்த காவலர்களே வாகனத்தை சிறிது தூரம் தள்ளிச்சென்று வாகனத்தை ஸ்டார்ட் செய்து,

பின்னர் விசாரணை கைதிகளை வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.