தஞ்சை அருகே வாய்க்காலில் கார் விழுந்தது. காருக்குள் இருப்பவர்கள் காயத்துடன் போராடிக்கொண்டு இருந்தவர்களை அந்த வழியாக நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் நிறுத்தி விட்டு பொது மக்கள் உதவியுடன் காருக்குள் இருந்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அப்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் வரவில்லை. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சேர்ந்தவர் நடராஜன், இவர் தனது குடும்பத்தினருடன் கோயம்புத்தூருக்கு காரில் சென்றார். காரை மற்றொரு நடராஜன் என்பவர் ஓட்டி சென்றார். புறவழிச்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது 8 ம் நம்பர் கரம்பை அருகே சென்றபோது, சாலையின் வலதுபுறம் அப்பகுதி மக்கள் நெல் கொட்டி காய வைக்கப்பட்டு இருந்ததால் வலதுபுறமாக டிரைவர் காரை ஒட்டி சென்றனர்.

எதிர்திசையில் வந்து கொண்டிருந்த லாரி வேகமாக வந்ததால். கார் டிரைவர் லாரி மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பி உள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்து விழுந்தது. வாய்க்கால் தண்ணீரில் பாதி அளவிற்கு மூழ்கிய நிலையில் கார் மிதந்தது. காரில் இருந்தவர்கள் காயத்துடன் போராடி கொண்டு அலறி உள்ளார்கள்.
அந்த நேரத்தில் கண்டியூரில் இருந்து நோயாளியை ஏற்றிக் கொண்ட சென்ற ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் ஹரிஹரனும். செவிலியர் தெட்சினாமூர்த்தியும் அவ்வழியில் சென்று கொண்டிருந்த போது இதனை பார்த்தால் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு இறங்கி சென்று பார்த்து உள்ளனர். காருக்குள் நான்கு பேர் காயத்துடன் போராடிக் கொண்டு இருப்பதை கண்ட இவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும், பள்ளியக்ரஹாரம் மற்றும் மருத்துவக் கல்லூரி பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைத்து பின்னர் ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு செல்லும் வரை தீயணைப்பு துறையினர் வரவில்லை.
புறவழிச்சாலையில் நெல் கொட்டி காய வைக்கப்பட்டு இருந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்பட்டுள்ளது.ஆம்புலன்ஸ் ஊழியகள் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்டனர். இந்த செயல் பொதுமக்களிடம் இருந்து வரவேற்பை பெற்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.