பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புனரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3-வது புனரமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சமபங்கு அளிப்பதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் இதில் அடங்கும்.
இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1,50,000 கோடியிலிருந்து ரூ.2,10,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதுப்பிக்கப்பட்ட நிதியுதவித் திட்டத்தின் மூலம் நாட்டின் தொலை தூரப் பகுதிகளுக்கும் தொடர்பு வசதி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நிலையான தொலைத்தகவல் சேவை நிறுவனமாக பிஎஸ்என்எல் வளர்ச்சி பெறும்.
Leave a Reply
You must be logged in to post a comment.