நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ இன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ .ஏ. சோதனை நடத்துவது சட்ட விதிமீறல் என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ .ஏ. சோதனை நடத்துவதை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் சங்கர், சேவியர் பெலிக்ஸ் ஆகியோர் நீதிபதி எம்.எல். ரமேஷ் முன்பு அவசர முறையீடு செய்துள்ளனர்.

மேலும் பிற்பகலில் விசாரிப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எல். ரமேஷ் அறிவிப்பு தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் மற்றும் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் விஷ்ணுவிடம் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள், யூடியூபர் நாம் தமிழர் கட்சி துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் நீதிபதி ரமேஷ் முன்பு ஆஜராகி இந்த சோதனை என்பது ஒரு சட்ட விரோதமானது என்றும், ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் உடனடியாக சோதனை நடத்தினார்கள் என்றும் இது தேசிய புலனாய்வு சட்டத்திற்கு எதிரானது என்றும் எனவே இது குறித்து அவசர வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் என்றும் அந்த அவசர வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்கள்.

இதை அடுத்து நீதிபதி இந்த வழக்கை தாக்கல் செய்யுங்கள் இன்று மதியம் நான் இந்த வழக்கை விசாரணை மேற்கொள்கிறேன் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கு இன்று மதியம் 2:15 மணிக்கு விசாரணைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.