நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் கடந்த மாதம் 24ம் தேதி காலமானார். கடந்த 4 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சையில் இருந்ததால், அஜித் தந்தையின் சடலம் உடனடியாக தகனம் செய்யப்பட்டது.
இதனையடுத்து ஏராளமான திரை பிரபலங்கள் அஜித் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில், தந்தையின் மறைவுக்கு பின்னர் முதன் முறையாக வெளியே வந்த அஜித், வாடிய முகத்துடன் ரசிகர்களை சந்தித்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன.
அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து அவர் லைகா தயாரிக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் அப்டேட் இன்னும் வெளியாகாத நிலையில், அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த மாதம் 24ம் தேதி அதிகாலை அஜித்தின் தந்தை காலமானது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து உடனடியாக அஜித் தந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், விஜய், சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி திரை நட்சத்திரங்களும் அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்நிலையில், தந்தை மறைவுக்குப் பின்னர் வீட்டிலேயே தனது அம்மாவுடன் ஓய்வில் இருந்த அஜித், இன்று முதன்முறையாக வெளியே வந்துள்ளார். வெளியூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர்.
ஆனாலும், ரசிகர்களிடம் கோபம்கொள்ளாத அஜித் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். ஆஷ் கலர் கார்கோ பேண்ட், வெள்ளை சட்டை அணிந்து ஸ்மார்ட்டாக இருந்தாலும், அஜித்தின் முகம் வாடிப்போய் உள்ளது. தந்தையை இழந்த சோகத்தில் இருந்து அஜித் இன்னும் மீளவில்லை என்பதே அவரது வாடிய முகத்தில் தெரிகிறது. இருப்பினும் ரசிகர்களுக்காக மெல்லிய புன்னகையுடன் அவர்களுடன் போட்டோஸ் எடுத்துக்கொண்டார்.

இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட அஜித்தின் சமீபத்திய புகைப்படங்கள், டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், அஜித்தின் வாடிய முகத்தை கண்ட அவரது ரசிகர்கள், அஜித் விரைவில் இயல்புநிலைக்கு வருவார் எனவும் நம்பிக்கை தெரிவித்து கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். தந்தையின் மறைவுக்கு முன்பே செல்லும் இடமெல்லாம் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார் அஜித்.
ஆனாலும், தந்தை மறைவுக்குப் பின்னர் இப்படியொரு வாடிய முகத்துடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள், அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் ஏகே 62 படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவுள்ளதால், அஜித் பழைய நிலைக்கே திரும்புவார் என அவர்கள் காத்திருக்கின்றனர். தந்தை மறைவுக்குப் பின்னர் முதன்முறையாக அஜித்தின் புகைப்படம் வெளியே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply
You must be logged in to post a comment.