கோவை அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் போராட்டம்.!

1 Min Read
காலி குடங்களுடன் போராட்டம்

கோவை மாநகராட்சியில் சரிவர குடிநீர் வராததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருவதாக தெரிவித்து மாநகராட்சி மேயர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.‌‌கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.

- Advertisement -
Ad imageAd image
காலி குடங்களுடன் போராட்டம்

இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு முன்னர் அதிமுக கவுன்சிலர்கள் 38 வது வார்டு‌‌ஷர்மிளா, 47 வது வார்டு‌‌பிரபாகரன், 90 வது வார்டு ரமேஸ் ஆகியோர் மாநகராட்சி கூட்டம் நடைபெற்று வரும் விக்டோரியா மஹால் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் கோவை மாநகராட்சியில் சரிவர குடிநீர் வராததை கண்டித்தும், மேயர் கல்பனா தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

Share This Article

Leave a Reply