அதிமுக வேட்பாளர் பட்டியல்-தேமுதிகவிற்கு 5 சீட்

2 Min Read
எடப்பாடி

தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி கூறினார். தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலையொட்டி திமுக தனது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்திருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலும் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. தொகுதி பங்கீடு மட்டுமே நிறைவு செய்ய வேண்டியுள்ளது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகதான் இந்த தேர்தலில் கூட்டணியை இறுதி செய்வதில் தடுமாறிவிட்டது. தற்போது வரை கூட்டணி பேச்சுவார்த்தை முழுமையாக நிறைவு அடையவில்லை.

- Advertisement -
Ad imageAd image
வேட்பாளர் பட்டியல்

இந்த நிலையில், லோக்சபா தேர்தலில் போட்டியில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி,

சிதம்பரம் – சந்திரஹாசன்
மதுரை – சரவணன்
தேனி – நாராயணசாமி
வட சென்னை – ராயபுரம் மனோ
தென் சென்னை – ஜெயவர்தன்
காஞ்சிபுரம் – ராஜசேகர்
நாமக்கல் – தமிழ்மணி
கரூர் – கே.ஆர்.என். தங்கவேல்
கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ்
அரக்ககோனம் – விஜயன்
ஆரணி – கஜேந்திரன்
விழுப்புரம் – பாக்கியராஜ்
சேலம் – விக்னேஷ்
நாமக்கல் – தமிழ்மணி
ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
ராமநாதபுரம் – பா ஜெயபெருமாள்.

தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும் தேமுதிக தனது நிலைப்பாட்டை தெரிவித்த நிலையில் 5 இடங்கள் தேமுதிகவிற்கு வழங்கப்பட்டது.. பாமகவுடன் பெச்சுவார்த்தை நடத்தியது. கடைசி வரை பாமக அதிமுக கூட்டணியில் இடம் பெறும் என்று சொல்லப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாமக பாஜக பக்கம் தாவிவிட்டது. இதனால், தற்போது தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிக 5 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்டது. ஆனால் அதிமுக இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளரை சந்தித்தனர். அப்போது தேர்தல் ஒப்பந்தத்தில் இருவரும் பரஸ்பரம் கையெழுத்திட்டனர். இதையடுத்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எடப்பாடி பிரேமலதா

அதன்படி
திருவள்ளூர்(தனி),
மத்திய சென்னை,
கடலூர்,
தஞ்சாவூர்,
\விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.தேமுதிகவில் இன்னமும் வேட்பாளர் தேர்வு செய்யவில்லை விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என அக்கட்சி அறிவித்துள்ளது.

 

 

Share This Article

Leave a Reply