பிரதமர் ஆட்சியில் அமரும் போது வள்ளிக்கு கும்மி என்று உரிய அங்கீகாரம் : மத்திய அரசால் வழங்கப்படும் – அண்ணாமலை..!

2 Min Read

மீண்டும் பிரதமராக மோடி அமரும் போது வள்ளிக்கு கும்மி கலைக்கு என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும், பாரம்பரியான கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும், அப்படி கொடுக்கும் பொழுது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பிரதமர் ஆட்சியில் அமரும் போது வள்ளிக்கு கும்மி என்று உரிய அங்கீகாரம் : மத்திய அரசால் வழங்கப்படும் –
அண்ணாமலை

மேலும் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு பிரதமரை பலப்படுத்த போகின்றோம். பிரதமர் வலிமையாக வந்து அமரும் போது கோவையும் அப்போது வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். பாராளுமன்ற உறுப்பினர் மோடி இருக்கும் கட்சியை சார்ந்த உறுப்பினர் கோவையில் இருக்க வேண்டும்.

எனவே உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் தாமரைக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார். அப்போது வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது, சீவக சிந்தாமணியில் பேசப்பட்ட கலை வள்ளி கும்மி என தெரிவித்தவர்.

பிரதமர் ஆட்சியில் அமரும் போது வள்ளிக்கு கும்மி என்று உரிய அங்கீகாரம் : மத்திய அரசால் வழங்கப்படும் –
அண்ணாமலை

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கும் போதும் வள்ளி கும்மி நடனம் ஆடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று நாங்கள் ஒரு உறுதி கொடுக்கின்றோம். அப்போது 2024-ல் பிரதமர் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளிக்கு கும்மி என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும்.

பாரம்பரியான கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கும் பொழுது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும்.

அண்ணாமலை

கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவையில் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை எனவும் மேயர் உள்ளிட்ட பதவிகள் டம்மியாக இருக்கின்றனர்.

Share This Article

Leave a Reply