நடிகர் மன்சூர் அலிகான் விவகாரத்தில் ஆயிரம் விளக்கு மகளிர் போலீசுக்கு கடிதம் அனுப்பிய நடிகை திரிஷா..!

2 Min Read

நடிகர் மன்சூர் அலிகன் விவகாரத்தில் ஆயிரம் விளக்கு மகளிர் போலீசுக்கு நடிகை திரிஷா விளக்கும் அளித்து கடிதம் அனுப்பி உள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

- Advertisement -
Ad imageAd image

இதை அடுத்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை திரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதற்கிடையே மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் முத்தரவிட்டது. தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப்ராய் ரத்தோருக்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசாரால் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நடிகை திரிஷா

மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கூறிய மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் சம்மன் வழங்கினர். இந்த சம்மனை ஏற்று நடிகர் மன்சூர் அலிகான் நவம்பர் மாதம் 23ஆம் தேதி ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து நடிகை திரிஷாவிடமும் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு போலீசார் கடிதம் அனுப்பி இருந்தனர். அந்த கடிதத்தில் நவம்பர் 30ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையே திரைநாயகி திரிஷா மன்னித்துவிடு என மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். இதற்கு நடிகை திரிஷா தவறு செய்வது மனிதம். மன்னிப்பது தேவதை குணம் என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டார்.

ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையம்

இதற்கிடையே தான் திரிஷாவிடம் மன்னிப்பு ஏதும் கேட்கவில்லை, என்று ஒரு அதிரடி அறிவிப்பை மன்சூர் அலிகான் வெளியிட்டார். இந்த பிரச்சனை இவ்வாறு இருக்க போலீசார் அனுப்பிய சம்மனுக்கு நடிகை திரிஷா பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. 30ஆம் தேதி வரையில் நேரிலும் ஆஜராகாமல் இருந்தார். இந்த நிலை நடிகை திரிஷா தரப்பிலிருந்து திடீரென கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் மன்சூர் அலிகான் பிரச்சனையில் நடவடிக்கை ஏதும் எடுக்க வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளதாகவும், ஆயிரம் விளக்கு போலீசார் நேற்று தகவல் வெளியிட்டனர். அடுத்த கட்டமாக இந்த பிரச்சினை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏனென்றால் மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் தெளித்த புகார் அடிப்படையிலேயே ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திரிஷா தரப்பிலிருந்து மன்சூர் அலிகான் மீது புகார் ஏதும் கொடுக்கவில்லை. இதனால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு ஏற்ப இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Share This Article

Leave a Reply