தமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்கிற பெயரோடு வலம் வருகிறார் நடிகர் விஷால். இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். நடிகர் விஷால் சினிமாவிற்கு வந்த தொடக்கத்தில் குடும்ப பாங்கான படங்களையும் ஆக்சன் காட்சிகளோடு இருக்கக்கூடிய படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த வகையில் அவருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
ஆனால் விஷாலுக்கு அவரது சமீபத்திய திரைப்படங்கள் முன்பிருந்த வரவேற்பை பெற்று தரவில்லை. அந்த வகையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம் பேக்காக அமைந்தது. அப்போது மார்க் ஆண்டனி திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ஹிட் படைத்தது. அப்போது மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து அவருடைய வெற்றி கூட்டணியான இயக்குனர் ஹரியுடன் இணைந்து விஷாலின் 34-வது படம் அறிவிக்கப்பட்டது.

விஷால் மற்றும் இயக்குனர் ஹரி முதல் முறையாக தாமிரபரணி படத்திற்காக இணைந்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து பூஜை திரைப்படம் இவர்களது கூட்டணியில் உருவானது. விஷால் மற்றும் ஹரி கூட்டணியில் வெளியான இரண்டு படங்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் மூன்றாவது முறையாக ரத்னம் படத்திற்காக ஹரி மற்றும் விஷால் கூட்டணி அமைத்தார்கள். மண் மனம் மாறாத கிராமத்து கதை, அதே ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் விஷயங்களுடன் விஷால் நடிக்கும் படம் தான் ரத்னம்.
ரத்னம் படத்தை கார்த்திகேயன் சந்தானம் அவரது ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. ரத்னம் படித்தல் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். தற்போது ரத்னம் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் விஷால்.

அது மட்டுமில்லாமல் படத்தின் ரிலீஸ் குறித்தும் மறைமுகமாக சில தகவலை கூறியிருக்கிறார். ரத்னம் படத்தின் படபடப்பை முடித்த விஷால் அவரது சமூக வலைதள பக்கத்தில், ரத்னம் படத்தின் முழு சூட்டிங் நிறைவடைந்ததாகவும், இயக்குனர் ஹரியுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்தது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், படத்தில் வேலை பார்த்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் பதிவிட்டு இருக்கிறார். மேலும் ரத்னம் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை ஆகிய நகரங்களில் நடைபெற்றதாகவும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் ஆக்சன் படங்களை விரும்புபவர்களுக்கு ரத்னம் செம்மயான விருந்தாக இருக்கும் எனவும் சம்மரில் ரிலீஸ் ஆகும் எனக் கூறப்பட்ட ரத்னம் திரைப்படம் மே மாதத்தில் ரிலீஸ் ஆகிறது என்பதையும் மறைமுகமாக கூறியிருக்கிறார். மேலும் மே மாதத்தில் எந்த தேதியில் ரத்னம் ரிலீஸாகிறது என்பது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடுவதாகவும் விஷால் பதிவிட்டிருக்கிறார். விஷாலின் இந்த பதிவு இந்த படத்திற்கான ஹைப்பை அதிகமாக்கி இருக்கிறது. ரத்னம் திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு விஷால் இயக்கி நடிக்கவிருக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் வேலை தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.