- மாற்று அரசியல் மாற்று சக்தி இந்த மாதிரி ஏமாத்துற வேலையெல்லாம் செய்ய மாட்டோம் என மாற்று அரசியலை முன்வைத்து மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசனை விமர்சித்தார் நடிகர் விஜய். அதேபோல அரசியல் மேடை என்றாலே கொந்தளிப்பாக பேசுவது, உலக வரலாறு, கோட்ஸ்களை எம்பி 3 ஆடியோ போல பேசுவது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் விமர்சித்துள்ளார் நடிகர் விஜய்.
நடிகர் விஜய் தமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை இன்று விக்கிரவாண்டியில் நடத்தினார். இந்த மாநாட்டில் வெளிப்படையாக பல்வேறு அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார் நடிகர் விஜய்.
வெறுப்பு அரசியல், பிளவுவாத சக்திகள், பெரியார் எங்கள் தலைவர் என்ற உடனே பெயிண்ட் அடிக்க டப்பாவை தூக்கிக் கொண்டு வந்துவிடுவார்கள் என சித்தாந்த எதிரியாக பாஜகவை கடுமையாக தாக்கிப் பேசினார் விஜய். அதேபோல மாற்று அரசியல் மாற்று சக்தி இந்த மாதிரி ஏமாத்துற வேலையெல்லாம் செய்ய மாட்டோம்.. உறுதியாக இறங்கி அடிப்போம் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனை பெயர் குறிப்பிடாமல் தாக்கினார் விஜய்.
அரசியல் கட்சியை கமல்ஹாசன் தொடங்கிய போது ‘மாற்று அரசியல்- மாற்று அரசியல் சக்தி’ என அதிகம் உச்சரித்தவர் கமல்ஹாசன். அதேபோல நாம் தமிழர் கட்சியின் தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பெயரை குறிப்பிடாமல், உலக வரலாறு, தலைவர்கள் கோட்ஸ் என எம்பி 3 ஆடியோ போல, கொந்தளிப்பாக பேசுவதான் அரசியல் இல்லை என மறைமுகமாக விமர்சித்தார் விஜய். அத்துடன் தமிழ்த் தேசியம் என்பது குறித்தும் பேசிய விஜய், தமிழ்த் தேசியம் திராவிட அரசியல் எல்லாம் எங்களுக்கு இரு கோட்பாடுகள் எனவும் போகிற போக்கில் ‘விஜயகாந்த்’ போல பேசியிருந்தார்.
விஜயகாந்த் தமது கட்சியின் பெயரை தேசிய முற்போக்கு திராவிட கழகம் என வைத்தார். திராவிடமும் தேசியமும் எதிரானது என்பது அரசியல் களம் அறிந்த அனைவருக்கும் தெரிந்தததுதான். ஆனால் இரண்டையும் ஒன்றாக இணைத்தவர் விஜயகாந்த். அதேபோல திராவிடம்- தமிழ்த் தேசியம்- தேசியம் மூன்றையும் ஒன்றாக்கி இருக்கிறார் விஜய்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/mixed-views-on-president-vijays-speech-at-the-mizhaka-vetri-kazhagam-conference/
திமுகதான் தமது அரசியல் எதிரி எனவும் பிரகடனம் செய்தார் விஜய். பெரியார், அண்ணா பெயரை வைத்துக் கொண்டு திராவிட மாடல் என மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றனர் என பகிரங்கமாகவும் விமர்சித்தார் நடிகர் விஜய்.
Leave a Reply
You must be logged in to post a comment.