ஹாட் டாபிக்காக இப்போது கோலிவுட்டில் ஓடிக்கொண்டிருப்பது சுசித்ரா அளித்த பேட்டி தான். சில நாட்களுக்கு முன்பு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுசித்ரா கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் குறித்து ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.
சூழல் இப்படி இருக்க பட்டியல் இன மக்களை இழிவாக கார்த்திக் குமார் பேசினார் என்று ஒரு ஆடியோ வெளியானது. தற்போது அதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார் கார்த்திக். வானொலியில் ஆர்.ஜேவாக இருந்து பின்னணி பாடகியாக அறிமுகமானவர் சுசித்ரா.

மேலும் பத்திரிகையாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அவர், கடந்த 2016 ஆம் ஆண்டு அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டிலிருந்து திரையுலக பிரபலங்கள் பற்றிய தகவல்களும், அவர்களது அந்தரங்க புகைப்படங்களும் வரிசையாக வெளியாகின.
அந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக ஷெட்யூல் போட்டு அந்த புகைப்படங்கள் அவரது அக்கவுண்ட்டிலிருந்து வெளிவந்துகொண்டே இருந்தன. இதற்கிடையே அவர் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார்.

சுச்சி லீக்ஸ் சமயத்தில் சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டதாக கார்த்திக் குமார் ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சுச்சி லீக்ஸில் தனுஷ், நிக்கி கல்ரானி, அனிருத், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
விவகாரம் பூதாகரமான சூழலில் சுசித்ரா இடையில் ஆளை காணவில்லை. அதேசமயம் கார்த்திக் குமாரை அவர் விவாகரத்தும் செய்து விட்டார். நிலவரம் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் சுசித்ரா.

அதில் அவர் கார்த்திக் குமார் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்றும், அவரும் தனுஷும் ஒரே அறையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் திரிஷா உள்ளிட்டோர் தான் அந்த புகைப்படங்களை பகிர்ந்தார்கள்.
எனது ட்விட்டர் அக்கவுண்ட்டை அவர்களிடம் கார்த்திக் தான் கொடுத்தார் என்று பேசினார். இந்த விஷயம் கோலிவுட்டில் புதிய புயலை கிளப்பியது. இதனை அடுத்து தான் ஒரு தன் பாலின ஈர்ப்பாளராக இருந்தால் அதை பொதுவெளியில் சொல்வதற்கு தனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று கூறியிருந்தார் கார்த்திக் குமார்.

இந்த சூழலில் இன்று ஒரு ஆடியோ வெளியானது. அதாவது சுசித்ராவிடம் கார்த்திக் குமார் பேசுவதாக வெளியான அந்த ஆடியோவில்;- கார்த்திக் குமார் பட்டியலின மக்களை பற்றி தரக்குறைவாகவும், இழிவாகவும் பேசுவது போன்று இடம்பெற்றிருந்தது.
அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் படு ட்ரெண்டாகி கார்த்திக்கிற்கு எதிராக கடும் கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது. பலரும் கார்த்திக்கிற்கு எதிராக கடுமையாக அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்தார்கள்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கிறார் கார்த்திக் குமார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், “அது எனது குரல் இல்லை. அவை எனது வார்த்தைகள் இல்லை. நான் அப்படி பேசவே இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Leave a Reply
You must be logged in to post a comment.