போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி.
தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனைகளை தமிழக அரசு தடுக்க வேண்டும் என கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிரான பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி;-
தமிழகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தைத் தடுப்பதற்காக மாநில அரசு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை காலத்தின் கட்டாயம் என்றே கூற வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்திருப்பதும், அவற்றைப் பயன்படுத்துவோர், குறிப்பாக இளைய சமுதாயத்தினரின் எண்ணிக்கையும் இதனை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு 2000 கோடிக்கு மேல் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு துளி கூட போதை பொருள் இருக்கக் கூடாது என வலியுறுத்துகிறேன். அந்த அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் வாயிலாக திமுக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள மாணவர்களின் நலன் சீரழிந்து கொண்டிருப்பதை தடுக்க வேண்டும். இந்த அரசு விழித்து கொண்டு போதை பொருளை தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.