கொரோனா தொற்றுக் காலத்தில் மருத்துவமனை சுகாதாரம் இல்லை எனக் கூறி விதித்த அபராதத்தை திரும்ப பெற கோரி வழக்கு
கொரோனா தொற்றுக் காலத்தில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த மருத்துவமனைகளில் ரூ. 14.50 கோடி அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.- அரசு தரப்பு
எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிசன் டிப்ளமோ சான்றிதழை வைத்து மருத்துவம் பார்க்க முடியாது. இந்த விஷயம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை- நீதிபதி .
போலி மருத்துவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். இதுபோன்ற பட்டயப் படிப்பு சான்றிதழ்களை வைத்து, பொதுமக்கள் உயிருடன் விளையாடுகின்றனர். – நீதிபதி
போலி மருத்துவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள், எனவே அவர்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- நீதிபதி
வழக்கு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு.
தென்காசியை சேர்ந்த அமிர்தலால் என்பவர் தாக்கல் செய்த மனுவில் :
நான் தென்காசியில் சூர்யா மருத்துவமனை, ஏ எம் கே மருந்தகம் நடத்தி வருகிறேன். இந்த நிலையில் கொரோனா தொற்றுக் காலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு எனது மருத்துவமனையில் சோதனை மேற்கொண்ட சுகாதாரக் குழுவினர், மருத்துவமனை சுகாதாரம் இல்லை எனக் கூறி ரூ. ஐந்தாயிரம் அபராதம் விதித்து, அந்தத் தொகையை பெற்றனர். ஆனால் எனது மருத்துவமனை சுகாதாரமாக தான் உள்ளது. எனவே எனக்கு விதித்த ஐந்தாயிரம் அபராத தொகையை திரும்பத் தரக் கோரி அதிகாரியிடம் மனு அளித்தேன், அது நிராகரிக்கப்பட்டது. எனவே எனக்கு அபராதம் விதித்த ரூ. 5 ஆயிரம் தொகையை திரும்ப தர உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றுக் காலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தபோது, சுகாதாரமற்ற நிலை இருப்பது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில் அந்த மருத்துவமனைகளில் மொத்தமாக ரூ. 14.50 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்தத் தொகையை கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் செவிலியர்கள் முண்களப் பணியாளர்கள் என அனைவருக்கும் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. எனவே மனுதாரர் கோரும் அபராத தொகையை திரும்ப வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தனது மருத்துவமனையை சுகாதாரமாக வைத்திருந்ததற்கான எந்த ஆவணங்களையும் வழங்கவில்லை. அதிகாரிகள் அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்து அபராதம் விதித்தது சரியானதே. எனவே மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

அதேநேரம் தகுதி இல்லாத மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் பார்த்துள்ளனர். மனுதாரர், எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிசன் டிப்ளமோ சான்றிதழை சமர்ப்பித்துள்ளார். இந்த சான்றிதழை வைத்து மருத்துவம் பார்க்க முடியாது. இந்த விஷயம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலி மருத்துவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். இதுபோன்ற பட்டயப் படிப்பு சான்றிதழ்களை வைத்து, பொதுமக்கள் உயிருடன் விளையாடுகின்றனர்.
எனவே போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் மருத்துவமனையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு பணி புரியும் மருத்துவர் உள்ளிட்டோர் தகுதியானவர்களா என்பதை விசாரணை செய்ய வேண்டும். அதில் தவறு இருந்தால் சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.