கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து.வாகனம் சேதம்

2 Min Read
டாட்டா ஏசி

செஞ்சி அருகே திண்டிவனம் சாலையில் தனியார் கேஸ் நிறுவன குடோன் உள்ளது.வீடுகளுக்கு மற்றும் வனிக நிறுவனங்களுக்கு கேஸ் வினியோகம் செய்து வருகிறது இந்த கேஸ் நிறுவனம்.மொத்தமாக பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டு வீடுகள் மற்றும் கடைகளுக்கு டாடா ஏசி போன்ற வாகனங்களில் கேஸ் வினியோகம் செய்வது வழக்கம்.அப்படி வினியோகம் செய்ய பயன்படுத்தப்பட்ட டாட்டா ஏசி வாகனத்தில் ஏற்றி வைக்கப்பட்ட கேஸ் குடோனில் டாட்டா ஏசி வாகனத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து டாட்டா ஏசி வாகனம் முற்றிலும் சேதம் அடைந்தது.நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதுமில்லை.போலீசார் விசாரணை.

- Advertisement -
Ad imageAd image
தீயணைப்பு வீரர்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திண்டிவனம் சாலையில் தனியாருக்கு சொந்தமான கேஸ் குடோனில் நேற்று இரவு அந்தந்த ஊர்களுக்கு செல்வதற்காக வாகனங்களில் கேஸ் சிலிண்டரை ஏற்றி வைத்திருந்தனர்.இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென்று டாட்டா ஏசி வாகனத்தில் மின்கசிவு காரணமாக கேஸ் வெடித்து சிதறியதில் வாகனம் முழுவதும் முற்றிலும் ஏரிந்து சேதம் அடைந்தது.இரவு நேரம் என்பதால் குடோனில் யாரும் இல்லை.பகல் நேரமாக இருந்திருந்தால் கேஸ் சிலிண்டர் விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்கும்.கேஸ் சிலிண்டர் விபத்தில் டாட்டா ஏசி வாகனம் முழுவதுமாக சேதமடைந்தது.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து வாகனத்திற்கு தீ பரவிக் கொண்டிருந்த நிலையில் அதனை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.சிலிண்டர் விபத்து ஏற்பட மின் கசிவு தான் காரணமா?அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சிலிண்டர் வெடி விபத்து காரணமான குடோனில் சிலிண்டர்கள் சரி பார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.முழுவது சரி பார்த்த பின்னரே கேஸ் சிலிண்டர் வினியொகிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

டாட்டா ஏ.சி வாகனத்தில் மின் கசிவு காரணமாக கேஸ் வெடித்த சம்பவம் சுற்று வட்டார பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.இச்சம்பவம் குறித்து செஞ்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article

Leave a Reply