தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் 6வது மாநில மாநாடு திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் நடைபெற்றது . மாநில மாநாட்டை முன்னிட்டு முன்னதாக பழவேற்காடு கலங்கரை விளக்கிலிருந்து , மாநாடு திடலான , தோழர்.வைத்தியநாதன் நினைவரங்கம் வரை பேரணி நடைபெற்றது.
மாநாட்டிற்குத் தலைமை வகித்து, மாநிலத் தலைவர் ஜி. செலஸ்டின் பிலிப் , சங்க கொடியை ஏற்றி வைத்தார். வி. கலாவதி சிஐடியு கொடியை மாநில செயல் தலைவர் எம். கருணா மூர்த்தி ஏற்றி வைத்தார். வரவேற்புக் குழு செயலாளர் பழவேற்காடு டி. நித்தி யானந்தம் வரவேற்றார். மாநிலச் செய லாளர் பி.சகாய பாபு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.
மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் புல்லுவிளை ஸ்டான்லி துவக்க உரையாற்றினார். மாநில பொதுச் செய லாளர் எஸ். அந்தோணி வேலை அறிக்கையையும், மாநில பொருளாளர் எஸ். ஜெயசங்கரன் வரவு – செலவு கணக்கையும் சமர்ப்பித்தனர்.
சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் கே. விஜயன், மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியு மாநிலப் துணைப் பொதுச்செயலாளர் வி. குமார் நிறைவு ரையாற்றினார்.
மாநாட்டின் கோரிக்கைகளாக :
* மீனவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் அதானி விரிவாக்கத் திட்டத்தை கைவிட கோரியும் ,
*கடல் வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசு திட்டங்களை முறியடிக்கவும் ,
*கொசஸ்தலை ஆறு முகத்துவாரத்தில் கடல் சீற்றம் அதிகமாகி கருங்காலி கடற்கரை சாலை கடல் நீரால் சூழ்வதை தடுத்து நடவடிக்கை எடுக்ககோரியும்,
*எண்ணூர் முதல் ஆரம்பாக்கம் வரையில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும்,
*இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை தடுத்திடவும்,
*மீன்வளம் அழிவதையும் பழவேற்காடு சுற்றுலா தளம் அழிவதையும் பாதுகாக்க வேண்டி ,
*மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.18300-ஆக உயர்த்தக்கோரியும்
*இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்வதை தடுக்க மாநில, ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பெற்றது .. தமிழ்நாடு மீன் பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யு) சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் இந்த மாநில மாநாட்டில் கலந்து கொண்டனர்.
கொஞ்சம் இதையும் படிங்க: http://thenewscollect.com/1440-kg-of-ration-rice-to-be-smuggled-to-andhra-was-seized-in-tiruvallur/
மாநாட்டின் நிறைவாக வரவேற்புக்குழுத் தலைவர் ஜி. விநாயகமூர்த்தி நன்றி கூறி மாநாட்டினை முடித்து வைத்தார்
Leave a Reply
You must be logged in to post a comment.