2021 அக்டோபரில் தொடங்கப்பட்டதிலிருந்து, சேவை வழங்கலுக்கான ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார பரிவர்த்தனைகள், மே மாதத்தில் 10.6 மில்லியனாக உயர்ந்து, முந்தைய சாதனைகளை முறியடித்து மாதாந்திர பரிவர்த்தனைகளில் வலுவான வேகத்தைப் பெற்றுள்ளது.
10 மில்லியனுக்கும் அதிகமான முக அங்கீகாரப் பரிவர்த்தனைகளைப் பதிவுசெய்வது இது தொடர்ந்து இரண்டாவது மாதமாகும். முக அங்கீகரிப்பு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மேல்நோக்கி சென்றவண்ணம் உள்ளது. மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 38 சதவீதம் அதிகமாகும். இது கடந்த ஜனவரி மாத பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடுகையில், அதன் வளர்ந்து வரும் பயன்பாட்டைக் காணமுடிகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு , எம்எல் அடிப்படையிலான முக அங்கீகார தீர்வு, இப்போது மாநில அரசு துறைகள், மத்திய அரசில் உள்ள அமைச்சகங்கள் மற்றும் சில வங்கிகள் உட்பட 47 நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.
ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளைப் பதிவு செய்ய இது பயன்படுத்தப்படுகிறது; பிரதமரின் கிசான் திட்டத்தில் பயனாளிகளை அங்கீகரிப்பதற்காகவும், ஓய்வூதியதாரர்கள் வீட்டிலேயே டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை உருவாக்குவதற்காகவும்.
பல அரசுத் துறைகளில் ஊழியர்களின் வருகையைக் குறிக்கவும், சில முன்னணி வங்கிகளில் தங்கள் வணிக நிருபர்கள் மூலம் வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
கைகளைப் பயன்படுத்தி வேலை செய்பவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோரின் கைரேகைகளில் தெளிவில்லாத போது, முக அங்கீகாரம் ஒரு வலுவான மாற்றாக செயல்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.