இன்ஸ்டா காதலியுடன் திருநம்பி திருமணம் செய்து கொண்ட சம்பவம் செஞ்சி அருகே நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. தன் பாலின தம்பதியரின் திருமணம் அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பொன்பத்தி கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வினி வயது 23. இவர் தன் பாலின தூண்டுதலினால் ஆணாக மாறி பெயரை அஸ்வின் என மாற்றிக்கொண்டார். தற்போது இவர் காஞ்சிபுரத்தில் தங்கி நாடகக் கலைஞர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இருவருக்கும் செஞ்சி அடுத்த மேல் சித்தாமூர் பகுதியை சேர்ந்த கௌசல்யா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. கௌசல்யா சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நண்பர்களாக பழகி வந்த இவர்களது பழக்கம் நாளிடைவில் காதலாக மாறியது. இந்த காதல் தீவிரமாக மாறி ஒருவரை ஒருவர் பிரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால், இருவரும் இணைந்து வாழ தீர்மானித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனை அடுத்து இருவரும் கடந்த 22ஆம் தேதி சென்னை வடபழனி முருகன் கோவிலில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இது குறித்து இருவரும் பெற்றோர்களிடம் கூறினார்.
இது பெற்றோர்களை அதிர்ச்சடைய வைத்துள்ளது இதனை அடுத்து தனது மகளே மீட்டுத் தருமாறு கவுசல்யாவின் பெற்றோர் செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலிசார் இருவரின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அஸ்வின் கூறுகையில்; நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது என் நிலை உணர்ந்து ஆணாக மாறினேன். கடந்த ஆறு மாதமாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய கவுசல்யாவை தீவிரமாக காதலித்தேன். விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டோம்.

உயிர் உள்ளவரை அவளை சந்தோஷமாக கண் கலங்காமல் பார்த்துக் கொள்வேன் என்றார். இது குறித்து கௌசல்யா கூறுகையில்; நாங்கள் இருவரும் விரும்பியே திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் ஒரே பாலினமாக இருந்தாலும் எங்களுக்குள் அன்பே மட்டுமே எதிர்நோக்கி திருமணத்தை செய்து கொண்டோம். எங்களை பிரிக்க யார் முற்பட்டாலும் அது முடியாது என்றார். இருவரது வாக்குமூலத்தையும் எழுதி பெற்றுக்கொண்ட போலீசார் இருவரையும் சேர்த்து அனுப்பி வைத்தனர்.
இருவரது பெற்றோர்களும் தங்களுடன் வருமாறு அழைத்தும் பெற்றோர்களை மறந்து தங்கள் காதல் உண்மையானது எனக் கூறி இருவரும் சேர்ந்து வாழ ஒன்றாக இணைந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.