சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது45). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் செந்தில்குமார் விடுமுறையில் மனைவி தீபா(39), மகன் விஜயகிருஷ்ணா(12), மகள் குருபிரியா(8) ஆகியோருடன் காரில் சொந்த ஊரான கோவைக்கு சென்றுவிட்டு நேற்று காலை சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை செந்தில்குமார் ஓட்டினார்.
விழுப்புரம் அருகே பிடாகம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தகார் மேம்பால தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த தீபா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செந்தில்குமார் மற்றும் அவரது பிள்ளைகளை அக்கம்பக்கத்தினர் மிட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்துகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.