58 வயதான பெண் ஒருவர் மது போதையில் இருந்த தனது கணவரை கத்தியால் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் .
இதுகுறித்து போலீசார் கூறுகையில், நாமக்கல்பாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக பாலு (65) மற்றும் அவரது மனைவி ஈஸ்வரி இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். தம்பதியருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலு, கடந்த சில நாட்களாக தினமும் மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார் .

சனிக்கிழமை இரவு, அதிக மதுபோதையிலிருந்த பாலு , ஈஸ்வரியுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார் , இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது பிறகு கோபமடைந்த ஈஸ்வரி கணவரான பாலுவை கத்தியால் குத்தியுள்ளார் , இதில் சம்பவ இடத்திலேயே பாலு இறந்துள்ளார் . பின்பு என்ன செய்வது என்று அறியாமல் அவரது பிணத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார் .
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஈஸ்வரியை தேடி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.