நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்தியாவில் பல பகுதிகளில் மாணவ, மாணவிகள் இத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ள நிலையில், மலை மாவட்டமான நீலகிரியில் தோடர் பழங்குடியின பெண் நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். உதகை அருகில் அருவங்காடு பகுதியில் வசிக்கும் நார் சோர் குட்டன், நித்யா தம்பதியரின் மகள் நீத்து சின் (18) நீட் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று தோடர் பழங்குடியின மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மாணவிக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆசி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது பொருத்தமானவை கூறுகையில் ஆரம்பத்தில் கடினமானதாக இருந்தாலும் தேர்வில் வெற்றி பெறுவதே இலக்காக இருந்தது அது தற்போது நிறைவேறியுள்ளது.

எனக்கு உடன் பலமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் எனது தாய் தந்தைக்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாகவும் வரும் காலங்களில் தங்கள் சமூகத்தில் ஒவ்வொருவரும் படித்து அவர்கள் நினைக்கும் பதவியை அடைய வேண்டும் அதற்கு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். அதேபோல் மருத்துவராகி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே சிறு வயது முதலான தனது ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. என மாணவி தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.