கோவை மாவட்டம், அடுத்த ஆலந்துறை அருகே பூண்டி பகுதியில் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் அமைந்துள்ளது. இதனை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோவில் அமைந்துள்ளதால் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வனவிலங்குகள் இந்த கோவிலை கடந்து செல்வது வழக்கம்.
வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி மலை அடிவார பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்து அரிசி மற்றும் பல்வேறு உணவு பொருட்களை தின்றும் பொதுமக்களையுல் தாக்கும் சம்பவம் நடந்து இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை ஒன்று வெளியேறி உள்ளது. அப்போது கார் நிறுத்தம் அருகே அந்த யானை வந்த போது அங்கிருந்த பக்தர்கள் யானையை புகைப்படம் எடுப்பதில் குறியாக இருந்தனர்.
அப்போது அந்த யானை திடீரென பக்தர்களை துரத்தியதால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். மேலும் கார்களுக்கு இடையே ஒளிந்து கொண்டதால் பக்தர்கள் யானையிடம் இருந்து உயிர் தப்பினர்.

மேலும் உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறையினர் அங்கு வந்து ஒற்றை ஆண் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில்;- வனப்பகுதி ஒட்டி கோயில் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் வனப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கோவில் பகுதிக்கு வந்தால் உடனடியாக அங்கிருந்து விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில்;- தற்போது கோடை காலம் என்பதால் இரவு நேரங்களில் தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுகிறது. மலை அடிவாரத்தில் உள்ள கிராம மக்களும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வரும் பக்தர்களும் மிகவும் ஜாக்கிரதையாக வர வேண்டும்.
பக்தர்கள் வனப்பகுதி ஓட்டிய பகுதிகளுக்கு யாரும் செல்லக்கூடாது என எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.