கிருமாம்பாக்கம் ஓடையில் நீர் நாய். இதேபோல் பல ஆறுகளில் முதலைகள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. இந்த நிலையில் ஆறுகளில் அரிய வகை நீர் நாய்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவை மாலை நேரத்தில் கூட்டமாக ஆற்றில் விளையாடி வருகிறது. நீர்நாய் பாலூட்டி விலங்காகும். அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றில் கடல் நாயாக காணப்படுகிறது. மிகவும் தட்டை போன்ற கால்களை உடையது. மீன்கள் அதிகளவில் வசிக்கும் இடங்களில் வாழக்கூடியவை.
ஆற்றில் அரியவகை நீர்நாய்கள் உள்ளன. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். தற்போது தொடர் விடுமுறைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அரிய வகை நீர் நாய்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதேபோல் உள்ளூர் மக்களும் நீர் நாய்களின் விளையாட்டை மிக அபூர்வமாக இருப்பதாக கூறி வருகின்றனர். இந்த மாதிரியான சம்பவம் கிருமாம்பாக்கம் ஓடையில் முதல் முறையாக நடந்து இருக்கிறது பின்வருமாறு;

பாகூர் ஏரியில் இருந்து கலிங்கல் ஓடை கிருமாம்பாக்கம் வழியாக சென்று பனித்திட்டு கடற்கரை வரை நீண்டு கடலில் கலக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கன மழையால் நீர் நிலைகளில், நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் நிரம்பி, அந்த ஓடையில் வழிந்து வருகிறது. அந்த நீர் நிலைகளில் இருந்து தப்பிய மீன்கள், ஓடையில் அதிகமாக செல்வதாக தெரிகிறது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நீர் ஓடையில், குறிப்பாக கடலூர்- பாண்டி சாலை தனியார் மருத்துவமனை எதிரே கிருமாம்பாக்கம் ஓடையில் இரண்டு நீர் நாய்கள் தண்ணீரில் மூழ்கி எழுந்து விளையாடி வந்துள்ளது. மேலும் அவை, ஓடையில் வரும் மீன்களை அந்த இரண்டு நீர் நாய்கள் லாவகமாக பிடித்து தின்றுள்ளது.
இதனை அவ்வழியாக ரோந்து சென்ற கிருமாம்பாக்கம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன், காவலர் ஆனந்தராஜ் ஆகியோர் அதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுவரை இதே பகுதியில் நீர் நாயை யாரும் பார்த்ததில்லை. வனப்பகுதியில் நீர் நிலைகளில் மட்டும் காணப்படும். இது போன்ற விலங்குகள் முதல் தடவையாக கிருமாம்பாக்கம் ஓடையில் காணப்படுவது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழிவின் பிடியில் உள்ள நீர் நாய்களை பாதுகாப்பது அவசியம். உயிர்ச்சூழல் மண்டலத்தில் நீர் நாய் களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. எனவே நீர் நாய்களை பாதுகாப்பது அவசியம். உயிர்ச்சூழல் மண்டலத்தில் நீர் நாய் களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. எனவே நீர் நாய்களை பாதுகாக்க நாம் அனைவரின் கடமை. இதற்காக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
Leave a Reply
You must be logged in to post a comment.