திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, பண்ணைக்காடு பேரூராட்சி அருகே உள்ள வத்தலகுண்டு – கொடைக்கானல் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சிதம்பரத்தில் இருந்து 11 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

அப்பொழுது ஊத்து என்ற பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக வாகனத்தில் புகை வந்து உள்ளது. இதன் காரணமாக ஓரமாக வாகனத்தை நிறுத்தி முன் பகுதியில் உள்ள என்ஜின் உள்ள பேனட்டை திறந்து பார்த்தனர். அப்பொழுது திடீரென தீ மளமளவென துவங்கியது.
உடனடியாக வாகனத்தில் இருந்த அனைவரும் கீழே இறங்கினர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இது குறித்து தாண்டிகுடி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் வாகனம் முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ரேடியேட்டர் தண்ணீர் இல்லாமல் அதிக நேரம் வாகனத்தை இயக்கியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டு உள்ளதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.