இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தில் பங்கேற்ற 80 ராணுவ வீரர்கள் சந்திப்பிற்கான தொடர் ஜோதி ஓட்டம்..!

2 Min Read

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தில் பங்கேற்ற 80 ராணுவ வீரர்கள் சந்திப்பிற்கான தொடர் ஜோதி ஓட்டம் கொட்டும் மழையில் காட்பாடியில் வரவேற்பு. இந்தியாவின் வெற்றியைக் கொட்டும் மழையில் கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர்கள் கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் போரின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், வேலூரில் இன்று (டிச.3) முன்னாள் ராணுவ வீரர்கள் கொட்டும் மழையிலும் தொடர் ஓட்டத்தில் பங்கேற்றனர்.

- Advertisement -
Ad imageAd image
80 ராணுவ வீரர்கள் சந்திப்பிற்கான தொடர் ஜோதி ஓட்டம்

1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கு பெற்ற பீரங்கி படை 195 ரெஜிமெண்ட்டை சேர்ந்தவர்கள். அப்போது அந்த போரில் டிசம்பர் 3 ஆம் நாள் முதல் 8 நாட்கள் நடந்த போரில் காஷ்மீர் அருகே பூஞ்ச் என்ற இடத்தில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. அதில் பணியாற்றிய தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்தவர் அப்போது, அதில் பங்கு பெற ராணுவ வீரர்கள் அந்த தினத்தை நினைவு கூறவும் வெற்றி பெற்ற பின்னர், 50 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக அவர்களுடைய சந்திப்புக்கான நிகழ்ச்சி காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

80 ராணுவ வீரர்கள் சந்திப்பிற்கான தொடர் ஜோதி ஓட்டம்

இதனை தொடர்ந்து, ராணுவ வீரர்கள் நினைவு கூறும் வகையில் வேலூர் மாவட்டம், வேலூர் மக்கான் சிக்னல் அருகே இருந்து ராணுவ வீரர்கள் சந்திப்பிற்கான தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கொட்டும் மழையில் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் அருகே வந்தடைந்த ராணுவ வீரர்களின் தொடர் ஜோதி ஓட்டத்தினை 12 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினரும், உதயநிதி ரசிகர் மன்ற ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவருமான டீட்டா சரவணன் என்பவரும், தொடர் ஜோதி ஓட்டத்தில் ஓடி வந்த ராணுவ வீரர்களை வரவேற்று அவர்களுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

அப்போரில் பங்கேற்று தற்போது உயிருடன் உள்ள 80 ராணுவ வீரர்கள் குடும்பங்களுடன் தங்களோடு பணியாற்றிய சக ராணுவ வீரர்களை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article

Leave a Reply