உதகை அருகே கல்லட்டி மலைப்பாதையில் வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பாய்ந்த புலியால் வாகன ஒட்டிகள் அச்சம். சாலையை கடந்து சென்ற புலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள கல்லட்டி சாலை வன பகுதி வழியாக செல்லும் மலை பாதையாகும். இந்த கல்லட்டி மலை பாதையில் 36 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையை வீடியோ பதிவு செய்தபடி வந்த போது திடீரென வன பகுதியிலிருந்து புலி ஒன்று சாலையை நோக்கி பாய்ந்து சென்றது.

இதனால் வாகனத்தில் வந்தவர்கள் கிலி அடைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்த புலியை வாகனத்தில் பயணித்த சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்த போது புலி சாலையை கடந்தது பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.