Andrapradesh மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் வெடிவிபத்து 17பலி

2 Min Read
  • ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள அச்சுதாபுரத்தில் ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

 

- Advertisement -
Ad imageAd image

இந்த சம்பவத்தில் துரதிஷ்டமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் சிகிச்சையில் உள்ளனர் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் இதையடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு உட்பட்ட எசியன்டியா பார்மா நிறுவனத்தில் நேற்று மாலை பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. ரியாக்டர் வெடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இந்த கம்பெனியில் உள்ள ரியாக்டர் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் புதி மோகம், என்.ஹரிகா என்று அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் இருவரும் ரியாக்டருக்கு மிக அருகில் வேலை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

காயமடைந்த அனைவரும் அனகப்பள்ளி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ரியாக்டர் வெடித்ததில் உடல்கள் சிதறி, கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்தது. பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. சில தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சிய தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்சென்ஷியா நிறுவனத்தில் மதிய உணவு உண்ணும் நேரத்தில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் வெளியில் சென்றிருந்தால் பெரிய அளவிலான உயிர் சேதங்களை தவிர்க்க முடிந்தது.

விபத்து நடந்த இடத்திற்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று நேரில் சென்று விபத்து குறித்து விசாரிக்க உள்ளார் மேலும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சென்று பார்வையிட உள்ளார். மேலும், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த பகுதியில் தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை வரவழைக்கப்பட்டுள்ளது.

Share This Article

Leave a Reply