உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்து !

2 Min Read
  • உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் பகுதியில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு இந்து விபத்தில் படுகாயம் அடைந்த 14 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் இறந்தவர்களின் உடலை வாங்க மருத்து வருகின்றனர் விபத்தில் உயிரிழந்தவர்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், விபத்து நடந்த இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தது என்பதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்று இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்து கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்த சுற்றுலா வேன் ஒன்று எதிர்பாராத விதமான விபத்தில் சிக்கியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். எஞ்சியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வாழைப்பந்தல் பகுதியை சேர்ந்த 20 பேர் சுற்றுலா சென்றிருந்தனர். வேன் ஒன்றை எடுத்துக் கொண்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் இன்று அதிகாலை திருச்சி – சென்னை ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மேட்டத்தூர் அருகே வந்த போது வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து சாலையின் இடதுபுறம் இருந்த மரத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் எஞ்சியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரத்தில் சிக்கி கொண்டிருந்த வாகனத்தின் முகப்பு பகுதியை நவீன இயந்திரம் கொண்டு உடைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Share This Article

Leave a Reply