அரசு பேருந்தை வழிமறித்து பிறந்தநாள் கொண்டாடியதை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்தியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் அருகே தளவானூரை சேர்ந்தவர் நரேஷ். இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர் அருண் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அன்று அருணுக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வாங்கி கொண்டு கொண்டாடுவதற்காக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது தளவானூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பேருந்தை திருப்பாச்சனூரில் வழி மறித்த நரேஷ், அப்போது அந்த பேருந்து முன்பு பிறந்தநாள் கேக் வெட்ட முயன்றுள்ளார்.
அப்போது பேருந்தில் பயணித்த தளவானூரை சேர்ந்த மோகன் என்பவர் கீழே இறங்கி வந்து நீங்கள் பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக பேருந்தை நிறுத்தலாமா என்று கேட்டுள்ளார்.

அதில் ஆத்திரமடைந்த நரேஷ், தன் கையில் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் சாவியால் மோகனின் தலையில் அடித்து மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் நரேஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.