புதுச்சேரியில் பத்தாண்டு கொண்டாட்டத்தில் தோழியை கிண்டல் செய்ததை கண்டித்த வாலிபர் அடித்து கொலை..!

2 Min Read

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் காதல் ஜோடி இளம் பெண்ணை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

புதுச்சேரி, நோணாங்குப்பம் பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் வயது 16. இவர் நேற்று முன்தினம் இரவு தனது 16 வயது தோழியுடன் புதுச்சேரி கடற்கரையில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். புதுச்சேரியில் புத்தாண்டு நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு இருவரும் பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டனர். புதுச்சேரி, வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை, அந்தோணியார் கோவில் அருகே வந்த போது, பைக்கில் வந்த அரியாங்குப்பம் காக்காயன் தோப்பு நிர்மல் என்ற நிர்மல்குமார் வயது 23, விக்கி என்ற விக்னேஷ்வரன் வயது 22, இருவரும் ராஜேஷ் மற்றும் அவரது தோழிக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தோழியை கிண்டல் செய்ததை கண்டித்த வாலிபர் அடித்து கொலை

அப்போது நிர்மல் மற்றும் ராஜேஷிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் உடன் ராஜேஷ் தன்னை சிலர் பின் தொடர்ந்து வந்து கிண்டல் செய்வதாக தனது நண்பரான நோணாங்குப்பம் பாடசாலை வீதியை சேர்ந்த ஏ.சி மெக்கானிக் விக்கி என்ற விக்னேஷ்வரன் வயது 26, தகவல் கூறி வரவழைத்தார். இதன் உடன் நிர்மல் தனது நண்பர்களான காக்காயன் தோப்பு, பிரதீப் வயது 24, விஷ்வா என்ற மரியவிஷ்வா வயது 21, ஆகியோரை வரவழைத்தார். அதனை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், விக்னேஷ்வரன் கழுத்தில் நிர்மல்குமார் தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார். இதன் உடன் நிர்மல்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர். மயங்கி கிடந்த விக்னேஷ்வரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.

உருளையன்பேட்டை போலீசார் கைது

பின்னர் புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, நிர்மல் உள்ளிட்ட 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை சம்பவம் நடந்த ஆட்டுப்பட்டி அந்தோணியார் கோவில், ஒதியஞ்சாலை மற்றும் உருளையன்பேட்டை இரு போலீஸ் நிலையத்திற்கும் 100 மீட்டர் இடைவெளியில் உள்ள பகுதி, 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அப்பகுதியில் ஒரு போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், இந்த கொலை நடந்திருக்காது. இந்த சம்பவம் போலீசாரின் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு குறைபாட்டை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.

 

 

 

 

Share This Article

Leave a Reply