- பாபநாசம் முதல் அகஸ்தியர் அருவி வரை உள்ள சாலைகள் சீரமைக்க உத்தரவிட கோரி வழக்கு.மனுதாரர் தாக்கல் செய்துள்ள புகைப்படங்களை பார்க்கும்போது சாலைகளை தற்காலிக பராமரிப்பு செய்தது பொதுமக்களின் பணத்தை வீணடித்ததையே உறுதி செய்கிறது. – தலைமை நீதிபதி கருத்து.
சாலை சீரமைப்பு பணிகள் விரைவுபடுத்தி சீரமைக்க வேண்டும் சாலைகளை முறையாக சீரமைத்து அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

நெல்லை மாவட்டம் பாபநாசம் முதல் அகஸ்தியர் அருவி வரை சாலைகள் சேதமடைந்துதுள்ளதால் அதனை முறையாக சீரமைக்க உத்தரவிட கோரி சுந்தரவேல் மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், “தற்காலிகமாக சாலைகள் பராமரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அது தொடர்பான புகைப்படம் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைப் பார்த்த நீதிபதிகள், “சாலைகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 1 வரை மேடுகளும் பள்ளங்களும் நிரப்பப்பட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் மனுதாரர் எடுத்த புகைப்படங்கள் சாலைகளின் மோசமான நிலையை காட்டுகிறது. ஆகவே சாலைகளை தற்காலிக பராமரிப்பு செய்தது பொதுமக்களின் பணத்தை வீணடித்ததையே உறுதி செய்கிறது.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/defamation-case-aiadmk-general-secretary-edappadi-palaniswami-filed-a-petition-dmk-mp-dayanithimaran-protested/
சாலைகள் பராமரிக்கப்பட வேண்டும் எனக்கூறும் நிர்வாகம், இப்பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் சீக்கிரமாக நடக்கும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி, சாலைகளை முறையாக சீரமைத்து அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Leave a Reply
You must be logged in to post a comment.