தாய்மொழிக் கல்விதான் சிரந்த கல்வி என்று பல நாடுகள் ஆய்வு செய்து அறிவித்து வரும் நிலையில் தமிழர்களின் தாய்நாடான தமிழ்நாட்டில் இன்னமும் தமிழ் மொழிக்கு அதிராக செயல்படுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.ஆமாம் கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவியின் பெற்றோர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட வீடியோ தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் பேசிய அந்த பெற்றோர் கூறும்போது:
அவர் பெயர் சரண்யா என்றும் அவர் மகள் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6 வகுப்பு படிப்பதாகவும், அவரின் பெயர் சுபிக்ஷா என்றும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு உணவு அருந்தும் இடத்தில் உடன் படிக்கும் மாணவர் சுபிஷா மற்றும் பள்ளி தோழி (ஆசிரியரின் மகள்) இருந்த நிலையில் அவர்களிடம் ஒரு மாணவன் எனது தங்கை போன்று இருக்கிறார் என்று பேசி உள்ளார். அதற்கு ஆசிரியரின் மகள் உனது தங்கை பெயர் என்ன என்று கேட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பெயரை சுபிக்ஷா என்று தமிழில் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த உரையாடல் நடை பெற்ற போது மூன்று பேர் தமிழில் பேசியதாகவும், அதற்கு தனது மகளுக்கு மட்டும் அபராதம் விதித்து உள்ளதாகவும்,கூறியுள்ளார் அந்த ஆசிரியரின் இவர்கள் மகள்டியூஷ்ன் படித்து வந்த நிலையில் திடீரென நின்றுவிட்டார். மேலும் அவர்கள் வீட்டிற்கு சென்று டியூசன் படித்து வந்த அவர் மகளை பாதியில் அங்கு செல்வதை நிறுத்தியதால் பழிவாங்க ஆசிரியர் இதுபோன்று தொடர்ந்து மகளிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும், கூறிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பள்ளியில் படிக்கும் மாணவியை பழிவாங்க நினைக்கும் ஆசிரியரின் இந்த செயலை பலரும் கண்டித்து வருகின்ற நிலையில், இது போன்ற ஆசிரியர்கள் மீது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குழந்தைகள் மனதில் ஏற்படும் தற்கொலை முடிவுகளில் இருந்து பாதுகாக்க முடியும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இப்படி பழிவாங்கும் நோக்கம் இருப்பது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும்.என வே கல்வித்துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனே தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்கின்றனர் கல்வி ஆர்வலர்கள்.
Leave a Reply
You must be logged in to post a comment.