சென்னையை அடுத்த செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய நபருக்கு பன்னிரெண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 Min Read
  • சென்னையை அடுத்த செங்குன்றத்தில் கஞ்சா கடத்திய நபருக்கு பன்னிரெண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்றம்

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு நின்றிருந்த சென்னை மிண்ட் பகுதியை சேர்ந்த ஶ்ரீனிவாசன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 23.600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image
சென்னை உயர் நீதிமன்றம்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை போதைப் பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் முன்பு நடைபெற்றது. அப்போது , தன் மீதான குற்றச்சாட்டை ஶ்ரீனிவாசன் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவருக்கு பன்னிரெண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Share This Article

Leave a Reply