- தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதியினால் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் பங்கேற்பு.
தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி நாள் பெரியார் படம் ஊர்வலம் நடைபெற்றது. தஞ்சை ஆற்று பாலம் பெரியார் நினைவு தூண் அரியிலிருந்து புறப்பட்ட பேரணி தஞ்சை பனகல் கட்டிடம் வரை நடைபெற்றது. இதில் திராவிடர் கழகம் திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் பெரியாரின் தத்துவங்கள் மற்றும் பெரியாரின் சிந்தனைகள் குறித்த பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் பேரணியாக வந்தனர்.
பின்பு நடைபெற்ற சமூக நீதியினால் பொதுக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் திராவிடர் கழகத்தினர் கலந்து கொண்டு பெரியார் சிந்தனைகளை சித்தாந்தங்களை விளக்கினர் கூட்டத்திற்கு திராவிடர் கழக கிராம பிரச்சாரக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் அதிரடி அன்பழகன் தலைமை வகித்தார் இதில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.
Leave a Reply
You must be logged in to post a comment.