அஜித்தை வைத்து அரசியல் திரைப்படம் – வேற லெவல் பிளானில் இறங்கும் பிரபல இயக்குனர்..!

2 Min Read

அஜித் தற்போது மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கடந்தாண்டு மே மாதம் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு சில மாதங்கள் கழித்தே விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதை தொடர்ந்து அஜர்பைஜானில் கிளைமேட் சரியில்லாத காரணத்தால் படக்குழு சென்னைக்கு திரும்பியது.

அஜித்தை வைத்து அரசியல் திரைப்படம்

அதன் பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு தற்போது தயாராகி வருகின்றது. த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் என பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்திற்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த பத்து வருடங்களில் அஜித் சிவா மற்றும் வினோத்தின் இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்தார். அதை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி, ஆதிக் என வித்யாசமான இயக்குனர்களின் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கின்றார். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

வேற லெவல் பிளானில் இறங்கும் பிரபல இயக்குனர்

எப்போதெல்லாம் அஜித் தான் இதுவரை பணியாற்றாத இயக்குனருடன் இணைகின்றாரோ அப்போதெல்லாம் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியிருக்கின்றது. வெங்கட் பிரபு, விஷ்ணு வரதன், கௌதம் மேனன் என பல இயக்குனர்களின் பெயரை நாம் சொல்லலாம்.

இதுபோல அஜித் இணையாத ஒரு இயக்குனருடன் முதல் முறையாக பணியாற்றும் போது அந்த படத்தின் ரீச் வேற லெவெலில் இருக்கும். அதுபோல அஜித் ஒரு இயக்குனருடன் இணைவதாக இருந்து பின்பு அந்த கூட்டணி இணையாமல் போய்விட்டது.

அஜித் ரசிகர்கள்

ஆனால் எதிர்காலத்தில் அஜித்துடன் கண்டிப்பாக இணைந்து ஒரு படம் பண்ணுவேன் என்ற நமபிக்கையுடன் அந்த இயக்குனர் இருந்து வருகின்றார். அவர் வேறு யாருமல்ல செல்வராகவன் தான். தமிழ் சினிமாவில் ஜீனியஸ் இயக்குனர் என அழைக்கப்படும் செல்வராகவன் அஜித்தை வைத்து படமெடுக்க விருப்பப்பட்டுள்ளாராம்.

அஜித்தை வைத்து படமெடுக்க மூன்று முறை வாய்ப்பு வந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு தவறிப்போனது. அஜித் ஒரு இனிமையான மனிதர், அவரை வைத்து ஒரு அரசியல் படமெடுக்க தான் நான் ஆசைப்படுகின்றேன்.

அஜித்

எதிர்காலத்தில் அது நடக்கும் என்றும் நம்புகிறேன் என்றார் செல்வராகவன். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட பேட்டியில் செல்வராகவன் இதைப்பற்றி பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் இத்தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், அஜித்தை வைத்து அரசியல் படமெடுத்தால் வேற லெவெலில் ரீச்சாகும் என்றும் ,அஜித் மற்றும் செல்வராகவனின் கூட்டணி இணையவேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.

விடாமுயற்சி திரைப்படம்

அவர்கள் சொல்வதைப்போல அஜித் மற்றும் செல்வராகவனின் கூட்டணி இணைந்தால் அந்த படம் வித்யாசமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Share This Article

Leave a Reply