- தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில் முறைகேடு குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட
பொதுநல வழக்கு.
வழக்கு தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு.

தேனியை சேர்ந்த மோடி கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் கீழ் சுகாதார பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தனியார் ஏஜென்சிகள் மூலமாக அவுட்சோர்சிங் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்காலிக பணியாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர்வு செய்யப்பட வேண்டும் என சுற்றறிக்கையை அனுப்ப உத்தரவிட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெயபிரகாஷ் என்பவர், தற்காலிக ஆராய்ச்சியாளராக கடந்த 2016ல் பணியில் சேர்ந்தார். ஆனால் இத்தனை ஆண்டுகளாகியும் அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. அவரது மனைவி சொப்பனஜோதி தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரிவதால், உரிய நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். ஆகவே 2021ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றத் தவறிய, தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியாக கௌரி அமர்வு, “வழக்கு தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.