- மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாக பிரச்னையில் பள்ளி தாளாளர் மீது பாலியல் புகார் தாளாளர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல்.பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின அறிக்கை திருப்தி அளிக்கிறது- நீதிபதி.நிர்வாக பிரச்சனையின் காரணமாகவே பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக நீதிபதி கருத்து.பள்ளியின் தாளாளருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரை நரிமேடு நேரு வித்யாசாலை பள்ளியில் உபரி ஆசிரியர்கள் சிலர் இருந்ததால் இதர பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இடமாறுதல் செய்தது. மீண்டும் அவர்கள் நேரு வித்யாசாலை பள்ளிக்கு திரும்பினர். தாளாளர் சேத் டேனிராஜ் அனுமதிக்கவில்லை. பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் தலையிட்டதால் ஒரு ஆசிரியை அனுமதிக்கப்பட்டார்.

அவரை சட்டவிரோதமாக தடுத்து, ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்து, வன்கொடுமை செய்ததாக சேத் டேனிராஜ் உட்பட சிலர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிந்தனர். ஆசிரியை மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மற்றொரு புகாரில் வழக்கு பதிந்தனர்.
இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் சேத் டேனிராஜ், முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.அதில் ஒரு ஆசிரியரின் உறவினர் பிரேமா என்பவர் பள்ளி நிர்வாகியாக இருந்தார். பின்னர் அவர் நீக்கப்பட்டார். அவர் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் அவருடன் கூட்டுச் சேர்ந்து ஆசிரியை எங்களுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளார். சம்பவத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு முழுமையாக செய்திருந்தார். எனவே இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்
இந்த வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது விசாரணையின் போது கீழமை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு பதிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் 150 ஆசிரியர் ஆசிரியை பணிபுரிந்து வருகின்றனர் மனுதாரர் பள்ளியின் தாளாளராக உள்ளார் பள்ளியில் நிர்வாகத்தில் இரண்டு குரூப்புகளாக செயல்பட்டு வந்துள்ளனர் நிர்வாகம் குறித்து இளமை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
எனவே இந்த வழக்கில் குற்றச்சாட்டின் உண்மை நிலை கண்டறிய மதுரை மாவட்ட ஆட்சியர் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர், காவல்துறை உதவி ஆணையர், மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அந்த உத்தரவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் புகார் தரப்பில் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
எனவே இந்த வழக்கில் பள்ளி தாளாளர் தரப்பில் கூறியது போல் நிர்வாக பிரச்சினை காரணமாகவே இந்த புகார் அளிக்கப்பட்டதாக அளிக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க இயலாது முன்னிருதம் காரணமாகவே இந்த புகார் வழங்கப்பட்டிருக்கலாம். என்றும் தோன்றுகிறது.
எனவே பள்ளி பாலியல் குற்றச்சாட்டு மீது நடத்தப்பட்ட விசாரணை கமிட்டியின் அறிக்கை நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கிறது எனவே இந்த வழக்கில் மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.