சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்கள் மீது நடத்தப்படும் சாதி ஆணவப் படுகொலை வன்முறைகளை தடுக்க கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக, ஜனநாயக, மனித உரிமை இயக்கத்தினர் ஒருங்கிணைந்து சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை ஆவண குற்றங்களை தடுத்திட அரசை வேண்டும் நோக்கில்,

சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக கூட்டியக்கம் என்று பெயரில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் செயல்படுகிறார்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகின்ற கொலை உள்ளிட்ட குற்றங்களில் சாதி, மறுப்பு திருமணம் செய்தல், காதல் புரிதல் முக்கிய ஒன்றாக உள்ளது.

சாதி மறுப்பு திருமணம் புரியும் இணையர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள், தாக்குதல் மீது உடனடியாக மாநில அரசு ஒரு சிறப்பு தனி பிரிவை உருவாக்க வேண்டும்.
தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு உடனடியாக அந்த புகார் முதல் தகவல் அறிக்கையாக தானியங்கி முறையில் பதிவு செய்யப்பட்ட அது உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு பிரிவானது முறையாக செயல்படுகிறதா என்பதை காவல்துறை உயர் அதிகாரிகள் கண்காணித்து அதை பாதுகாக்க வேண்டும்.
சிறப்பு பிரிவானது தனது வசதிக்கேற்ப ஆலோசனைகளை வழங்குபவர்களை எந்தவித தடை இல்லாமல் நியமனம் செய்ய வேண்டும். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் சாதிய ஆணவப் படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் மனு அளித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.