தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி மனுத்தாக்கல்.!

1 Min Read
  • தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ரஞ்சித இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும் வைணவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் விரைவில் ஒடிடியில் வெளியாக உள்ளதாகவும் அவ்வாறு வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம்

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/in-the-case-of-actor-dhanush-and-aishwaryas-case-the-case-was-adjourned-as-both-did-not-appear/

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, தங்கச் சுரங்கத்திற்காக ஆங்கிலேயர்கள் நிலத்தைக் கைப்பற்றத் திட்டமிட்ட சமயத்தில், அவர்களை எதிர்த்து பழங்குடியினத் தலைவர் தங்கலானின் துணிச்சலான போராட்டத்தைப் பற்றிய படம்

Share This Article

Leave a Reply