வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி தஞ்சையில், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம்.!

1 Min Read
  • வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி தஞ்சையில் தெய்வத் தமிழ் பேரவையினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

வள்ளலார் ஆன்மிகத்தை சிதைக்க கூடாது. வடலூர் சபையில் பன்னாட்டு மையம் அமைக்க கூடாது. வள்ளலார் பன்னாட்டு மையத்தினை மாற்று இடத்தில் கட்ட வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று 09-02-2024 காலை 11 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில் நடைப்பெற்றது.

- Advertisement -
Ad imageAd image

இதில் தமிழ்நாடு முதல்வர் உடனடியாக தலையீட்டு வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்காமல் வேறு இடத்தில் அமைக்கப்படும் என்று சட்டமன்ற கூட்டத்திலே அறிவிக்க வேண்டும் என சன்மார்க்க அன்பர்கள் வலியுறுத்தினர். வள்ளலார் பணியகம் மற்றும் தெய்வத் தமிழ்ப் பேரவையினர் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

மேலும் பெருவெளி காக்க வரும் பிப்ரவரி 20 -ஆம் நாள் கடலூரில் மஞ்சகுப்பத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவை நடத்தும் அறவழி போராட்டத்தில் சன்மார்க்க அன்பர்களும் பொது மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுக்கப்பட்டது.
திருபோரூர் வேலைக்கார ஐயா, உத்திர ஞான சிதம்பரம் சேவை இயக்க பொறுப்பாளர்கள் மு ச இளங்கோ, ராசேந்திர பிரசாத், திரு அருட்பா ஆ.பாலகிருஷ்ண பிள்ளை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கா.தமிழ்வேங்கை, வள்ளலார் பணியகத்தில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வே.சுப்ரமணியசிவா, முருகன்குடி பொறுப்பாளர் க.முருகன், அருட்பெருஞ்சோதி அறக்கட்டளை நிர்வாகி ராபர்ட் ஜெரால்டு, திரு முருகதாஸ் உள்ளிட்டோர் கருத்துகளை பகிர்ந்தனர். இதில் பல சன்மார்க்க அன்பர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்வை ஊடகவியலாளர் திரு விஸ்வநாத் ஒருங்கிணைத்தார். இதில் தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட சன் மார்க்கத்தினர் கலந்து கொண்டனர்.

 

Share This Article

Leave a Reply