புலித்தோல், மான் கொம்பு மற்றும் மண்ணுளி பாம்பு வைத்து இருந்த நபர் கோவையில் கைது

1 Min Read
சின்னதம்பிராஜ்

தமிழகத்தில் தொடர்ந்து வன விலங்குகள் வேட்டையாடுவது வழக்கமாகி விட்டது.சில சமூக விரோதிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகமாகி வருகிறது.இதற்கு காரணம் வனங்களில் விலங்குகளுக்கு தேவையான உணவு இல்லாததே.தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான வனப்பகுதிகள் விலங்குகளுக்கான உனவு வகைகளை தரும் மரங்கள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு யூக்கலிப்பட்ஸ் மரங்களை வளர்ப்பதே காரணம் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

- Advertisement -
Ad imageAd image

மேலும் சிலர் மருத்துவ தேவைகள் என கூறி மண்ணுளிப் பாம்பு போன்றவற்றை பிடித்து வருகின்றனர்.தோல், கொம்பு, பல் என வன விலங்குகளின் உடலுறுப்புகளையும் பறித்து வருகின்றனர்.மேலும் சிலர் காடுகளை அழத்தும் வன விலங்குகளுக்கு இருபிட தேவைகளை குரைத்து வருகின்றனர்.தமிழக அரசு இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த நிலையில் தான் கோவை, தடாகம் பிரிவு, மருதமலை சுற்றுவட்டார கோவில்மேடு பகுதியில் வனசாராக பணியாளர்கள் சின்னதம்பிராஜ் என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக வனவிலங்குகளின் தோல், கொம்பு போன்ற பொருள்கள்  இருப்பதாக வனத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

இதில் அவரது வீட்டில் வைத்து இருந்த புலித் தோல் ஒன்றும், காந்தி நாட்டு வைத்திய சாலை கடையில் வைத்து இருந்த மண்ணுளிப் பாம்பு உயிருடன் இரண்டும், இறந்த மண்ணுளி பாம்பு ஒன்று, மான் கொம்பு ஆகியவை கைப்பற்றப்பட்டது. மேலும் அவர் மீது வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றம் செய்த சின்னத்தம்பி ராஜா என்பவரை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது போன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினர் எச்சரித்தனர்.

Share This Article

Leave a Reply