- திருவையாறு அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒருவருக்கு கால் முறிவு. மற்ற இருவருக்கு லேசான காயத்துடன் மருத்துவமனையில்
அனுமதி.
அய்யம்பேட்டையில் இருந்து கண்டியூர் வழியாக திருவையாருக்கு சென்ற பாரிஸ் ஜாபர் இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தனர் அப்போது எதிரே வந்த கண்டியூரில் இருந்து திருவேதிகுடி சென்ற மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த அல்வின் ஜெரால்டு கண்டியூர் பிரதான சாலையில் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர் இதில் பாரிஸ் வலது கால் முறிந்து எலும்புகள் வெளியே தெரிந்தது மேலும் இரண்டு பேர் காயத்துடன் பொதுமக்கள் மீட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து திருவையாறு போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் ஏற்கனவே கண்டியூர் பிரதான சாலையாகவும் குறுகிய சாலை என்பதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர் இங்கு போக்குவரத்து காவல்துறையை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் தனி ஒரு நபர் சாலையின் நடுவில் ஜல்லி கற்களை கொட்டி வைத்து இருப்பதால் தினமும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாகவும் இரு பக்கமும் உள்ள ஆக்கிரமங்களை அகற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுகின்றனர்.

Leave a Reply
You must be logged in to post a comment.