தூத்துக்குடி டோல்கேட்டில் குடி போதையில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி விபத்து.

1 Min Read
விபத்துக்குள்ளான லாரி

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மேலஅரசடியில் உள்ள அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றி கொண்டு தூத்துக்குடியை சேர்ந்த வெங்கட்ராம் என்பருக்கு சொந்தமான டிப்பர் லாரியை, மணிகண்டன் என்பவர் மது போதையில் ஒட்டி சென்றுள்ளார். அப்போது, தூத்துக்குடி-மதுரை ரோட்டில் உள்ள புதூர்பாண்டியாபுரம் டோல்கேட்டில் வந்து கொண்டிருக்கையில், குடி போதையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கி முன்னே நின்று கொண்டிருந்த காரை இடித்து தள்ளியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

அப்போது லாரி நிலை தடுமாறி டோல்கேட்டில் நிலக்கரியோடு கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை. பின்னர் குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த லாரி டிரைவர் மணிகண்டன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்,.

இது குறித்து புதியம்முத்தூர் உதவி ஆய்வாளர் பாலன் சம்பவ இடத்தில் விசாரனை செய்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் சுங்கச்சாவடியில் இரண்டு கவுண்டர்கள்அடைக்கப்பட்டு இரண்டு சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன மேலும் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் லாரி நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Share This Article

Leave a Reply