- பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பொன்னி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பொதியாரன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
நான்கு கால யாக கலச பூஜையுகளுன் கலசநீர் மேல தாளங்கள் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு
ராஜ கோபுர கலசங்களுக்கும் பொன்னி அம்மனுக்கும் கும்பாபிஷேகமானது நடத்தப்பட்டு பின்னர் கலச நீர் ஆனது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது கும்பாபிஷேக விழாவில் ஆரம்பாக்கம் பழவேற்காடு பொன்னேரி கும்மிடிப்பூண்டி ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டு பொன்னி அம்மனை தரிசனம் செய்தனர்
விழாவிற்கான ஏற்பாடுகளை ரெட்டிபாளையம் பூங்குளம் பொதியாரான்குளம் உள்ளிட்ட நான்கு ஊர் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர் இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்று கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர்.
அதனை தொடர்ந்து
காலை 7மணி அளவில் கோ பூஜை, நான்காம் கால யாக பூஜை, பூரணாதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கல் முழங்க கோயிலை வளம் வந்து வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். மேலும் மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாரதனை நடைபெற்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.